“ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா?” - நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கோயில்களில் ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்ய முடியும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்முகநூல்
Published on

கோயில்களில் ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்ய முடியும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை கோரிய வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆதார் எண் அடிப்படையில் தரிசன நேரத்தை குறிப்பிட்டு முன் கூட்டியே இணையதளம் மூலம் டோக்கன் அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கோயிலில் “தரிசனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால் ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்?” என கேள்வி எழுப்பினர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம்... பலத்த சூறாவளிக்காற்றுடன் கரையை கடந்த 'டானா' புயல்!

“ஏழைகள் சாமி கும்பிடக் கூடாதா?; பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா?” என வினவிய நீதிபதிகள், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com