ஓபிஎஸ்-க்கு மீண்டும் பின்னடைவு: அதிமுக-வின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் நிரந்தர தடை

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ops eps
ops epspt desk
Published on

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடைவிதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

Madras high court
Madras high courtpt desk

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் எனவும் ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார்.

இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த மனுக்களில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து உத்தரவிட்டார்.

ops eps
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com