தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி
Published on

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் ராஜகோபால் ஆஜராகினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகதான் ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். ஆனால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

அதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தினால் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என ராஜகோபாலின் மகன் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, சிகிச்சைக்கான செலவு ஆகியவற்றை ராஜகோபாலின் மகன்தான் கவனிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, ராஜகோபாலுக்கு செயற்கை சுவாசம் பொறுத்தபட்டுள்ளதால் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com