கொரோனா அச்சுறுத்தல்: இறைச்சி விற்பனை வீழ்ச்சி - மீன் விலையேற்றம்!

கொரோனா அச்சுறுத்தல்: இறைச்சி விற்பனை வீழ்ச்சி - மீன் விலையேற்றம்!
கொரோனா அச்சுறுத்தல்: இறைச்சி விற்பனை வீழ்ச்சி - மீன் விலையேற்றம்!
Published on

சென்னையில் கோழிக் கறி விற்பனை 2 வாரங்களாக சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகளின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியாலும் கோழி இறைச்சியின் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. 180 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிவந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 100 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டுக் கோழி உயிருடன் 340 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆட்டு இறைச்சியை பொருத்தவரை பெரிய அளவில் மாற்றமில்லை. கடந்த மாதத்தை விட கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து, 760-க்கு ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.

மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் கடந்த வாரத்தை காட்டிலும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. வஞ்சிரம் மீன் 750 முதல் 800 ரூபாய் வரையிலும், வவ்வால் மீன் 550 முதல் 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பாறை, சீலா, சங்கார மீன்கள் 400 ரூபாய் வரையிலும், நெத்திலி 250 ரூபாய் வரையிலும், மத்தி மீன் 85 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. நண்டு அளவை பொறுத்து 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com