ஏரியில் விடப்பட்ட 1000 பிராய்லர் கோழிகள்.. கறிக்கோழி வியாபாரிகளின் பரிதாப முடிவு

ஏரியில் விடப்பட்ட 1000 பிராய்லர் கோழிகள்.. கறிக்கோழி வியாபாரிகளின் பரிதாப முடிவு
ஏரியில் விடப்பட்ட 1000 பிராய்லர் கோழிகள்.. கறிக்கோழி வியாபாரிகளின் பரிதாப முடிவு
Published on

திருப்பத்தூர் அருகே கொரோனா அச்சத்தால் 1000 பிராய்லர் கோழிகளை அடையாளம் தெரியாத நபர்கள் ஏரியில் விட்டுவிட்டு சென்றனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் பிராய்லர் கோழி மற்றும் முட்டையின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த கீழ்குப்பம் மற்றும் உடையாமுத்தூர் ஏரிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர். அந்தக் கோழிகளை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமைத்து சாப்பிட பிடித்து சென்று உள்ளனர்.

அவை நோய்வாய்பட்ட கோழிகளா என ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆயிரம் கோழிகள் விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மதுரையில் பெரும்பாலான பிரியாணி கடைகளில் விற்பனை சரிந்ததன் காரணமாக, ரூ.100க்கு விற்பனையான பிரியாணி தற்போது ரூ.70க்கு விற்கப்படுகிறது.

அத்துடன் கிரில்டு மற்றும் தந்தூரி உள்ளிட்ட சிக்கன் வகை உணவுப் பொருட்களுக்கு உணவங்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சிக்கன் கடை உரிமையாளர்கள், ஒரு கிலோ சிக்கன் வாங்கினால் 10 முட்டை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். இதுபோன்று சலுகைகள் கொடுப்பதினால் விற்பனை சற்று அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து மந்தமாகி வந்த சிக்கன் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது மனநிறைவை தருவதாகவும் சிக்கன் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com