கொரோனா பரவல்; அரசுப்பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!

கொரோனா பரவல்; அரசுப்பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!
கொரோனா பரவல்; அரசுப்பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு!
Published on

கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்ல வேண்டாமென ஆளுநரின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், இந்த மாதம் 20ஆம் தேதி வரை, அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு ’மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர் 3 இயக்கம்’ நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com