கறிக்கோழிகளுக்கு கொரோனா என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபர் கைது

கறிக்கோழிகளுக்கு கொரோனா என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபர் கைது
கறிக்கோழிகளுக்கு கொரோனா என சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபர் கைது
Published on

சேலம், நாமக்கல்லில் கறிக்கோழிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளது என்ற தகவல் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் கோழிக்கறி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் எனவும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல் பரவி வந்தது.

இதையடுத்து கறிக்கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கியதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொய்யான செய்தி‌களை பரப்பி‌யவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கரூர் மாவட்டம் தென்னிலையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து தகவல் பரவியதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். பொய்யான தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்ட பெரியசாமி, அதற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com