வீடில்லாமல் சாலையோரம் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தினந்தோறும் நடிகர் விஜய் ரசிகர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்கள், ஒரு வேளை உணவுக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க விவசாய அணியினர் தினமும், சாலையோரம் வசிக்கும் மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட விவசாய அணியின் மாவட்ட தலைவர் இரா.கோகுல் தலைமையிலான விஜய் ரசிகர்கள் தாங்களே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு தாயார் செய்து அரசு மருத்துவனையில் நோயாளிகளின் உறவினர்கள், சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர்கள் மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் வீடின்றி சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கும் இருசக்கர வாகனங்களில் உணவை நேரிடையாக கொண்டு சென்று விநியோகம் செய்கின்றனர் விஜய் ரசிகர்களின் இந்த செயல் ஏழை எளிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.