கொரோனா கால மகத்துவர்: 3 வேளையும் சுடச்சுட உணவு வழங்கும் பாதரக்குடி இளைஞர் குழுவினர்

கொரோனா கால மகத்துவர்: 3 வேளையும் சுடச்சுட உணவு வழங்கும் பாதரக்குடி இளைஞர் குழுவினர்
கொரோனா கால மகத்துவர்: 3 வேளையும் சுடச்சுட உணவு வழங்கும் பாதரக்குடி இளைஞர் குழுவினர்
Published on

சீர்காழி முதல் கொள்ளிடம் வரை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் ஆதரவற்றோர்க்கு மூன்று வேளை உணவு, குடிநீர் ஆகியவற்றை பாதரக்குடி இளைஞர் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மூன்று வேளையும் உணவு மற்றும் குடிநீரும் கடந்த 20 நாட்களாக வழங்கி வருகின்றனர். நகர் பகுதியில் சுற்றி திரியும் ஆதரவற்றோர்க்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கிவரும் நிலையில், கிராமங்களில் நிலையின்றி வசிக்கும் நரிக்குறவர் மக்களின் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.

இதனை அறிந்த பாதரக்குடி இளைஞர் குழுவினர் பாதிக்கபட்ட மக்களை சந்தித்து மூன்று வேளையும் உணவு வழங்குவதாக உறுதியளித்தனர். அதன்படி தங்களது சுயநிதி பங்களிப்புடன் இளைஞர்களே இணைந்து மூன்று வேளையும் சுகாதாரமான உணவு தயார் செய்து குடிநீருடன் வழங்கி வருகின்றனர். புத்தூர் கிராமத்தில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்திற்கு குறித்த நேரத்திற்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

பாதரக்குடி இளைஞர்களின் சேவையை சமூக வலைதளங்களின் மூலம் அறிந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்றை உணவிற்கான தொகையை வழங்குவதாக கூறி பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கி வருகின்றனர். இதனால் உற்சாகம் அடைந்துள்ள இளைஞர்கள் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் வரை அடுத்தடுத்த கிராமங்களிலும் பாதிக்கபட்ட மக்களை அடையாளம் கண்டு அவர்கள் இருப்பிடம் சென்று உணவும் குடிநீரும் வழங்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com