திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் வீடுதேடி சென்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதோடு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கும்மிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே மோரை ஊராட்சியில் 5000 குடும்பங்கள் உள்ளன. தற்போது ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்து வரும் கிராம மக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஏற்பாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, உப்பு, சமையல் எண்ணெய், பருப்பு, மிளகாய் தூள், உள்ளிட்ட 28 லட்சம் மதிப்பிலான 13 வகை மளிகை பொருட்களை தனியார் நிறுவனமும் ஊராட்சி மன்றத் தலைவரும் இணைந்து நிவாரணமாக வழங்கினர்.
இதனை, ஊராட்சியில் உள்ள 12 கிராமங்களுக்கும் வீடு வீடாக சென்று ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் வழங்கியதோடு பொதுமக்களை கையெடுத்து கும்மிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தேவையின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் ஏதேனும் தேவை இருப்பின் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.