ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் 60 குடும்பங்களுக்கு, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வருமானம் இன்றி தவிக்கும் சாலையோரம் வசிப்போர், இருளர்கள், நரிக்குறவர்கள் போன்ற ஏழை எளிய மக்களுக்கு, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, அவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கினார்.
காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை, செவிலிமேடு, பிள்ளையார் பாளையம், பஞ்சுப்பேட்டை போன்ற பகுதிகளில் வசிக்கும் 60 குடும்பங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.