கொரோனா கால மகத்துவர்: ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மகிழும் திருவள்ளூர் திருநங்கை

கொரோனா கால மகத்துவர்: ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மகிழும் திருவள்ளூர் திருநங்கை
கொரோனா கால மகத்துவர்: ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து மகிழும் திருவள்ளூர் திருநங்கை
Published on

பொன்னேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு திருநங்கை ஒருவர் உணவளித்து வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் செல்வராணி (69). திருநங்கையான இவர், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு ஒருவேளை உணவு அளித்து வருகிறார். பழைய பேருந்து நிலையம், தேரடி, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், நடைபாதை வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறிய போது, ’’எனது ஜீவாதாரத்திற்காக வீதி வீதியாக, கடை கடையாக சென்று யாசகமாக பெற்ற பணத்தில் எனது அன்றாட செலவு போக குறிப்பிட்ட தொகையை சேமித்து வைத்திருந்தேன். கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படுவதைக் கண்டு கண்ணீர் விட்டேன். இந்த மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு வந்தது.

அதனால், கடந்த 7 நாட்களாக நாள்தோறும் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறேன். இதுவரை 80 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவழித்திருக்கிறேன்.  69 வயதாகும் எனக்கு இந்நாள்வரை எந்த நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன். இதற்கு காரணமான கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதனை செய்து வருகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com