கூடலூர்: 10 மணிநேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் சாலைக்கு வந்த கொரோனா நோயாளிகள்

கூடலூர்: 10 மணிநேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் சாலைக்கு வந்த கொரோனா நோயாளிகள்
கூடலூர்: 10 மணிநேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் சாலைக்கு வந்த கொரோனா நோயாளிகள்
Published on

கூடலூரில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சாலையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 240-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக கூடலூர் நகர் பகுதியில் உள்ள S.S நகரில் 44 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை நேற்று காலை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிற்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பப்படும் எனவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர்.

S.S நகர் பகுதியில் வீடுகள் மிக நெருக்கமாக இருப்பதால் அங்கு வசிப்பது பாதுகாப்பில்லை என உணர்ந்த தொற்றால் பாதிக்கபட்ட மக்கள் முகாம்களுக்கு செல்ல தயார் ஆகினர். ஆனால் மாலை 6 மணி வரை அவர்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பப்படவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த தொற்று பாதிப்புக்கு உள்ளான மக்கள் சாலையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து நோய் தொற்றுக்கு ஆளானவர்களை பராமரிப்பு முகாம்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கூடலூரில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனிமை படுத்தும் மையங்களில் படுக்கை வசதியும் குறைவாகவே இருக்கிறது. அதேபோல ஆம்புலன்ஸ் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவே தொற்று பாதிக்கப்பட்டவர்களை முகாமுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com