கொரோனா தொற்று: ஆம்புலன்ஸ் இல்லாததால் அலைக்கழிக்கப்படும் சென்னை மூதாட்டி

கொரோனா தொற்று: ஆம்புலன்ஸ் இல்லாததால் அலைக்கழிக்கப்படும் சென்னை மூதாட்டி
கொரோனா தொற்று: ஆம்புலன்ஸ் இல்லாததால் அலைக்கழிக்கப்படும் சென்னை மூதாட்டி
Published on

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கும் கொரோனா பாதிப்படைந்த மூதாட்டி, மருத்துவமனையில் உள்ளவர்கள் அலட்சியம் காட்டுவதாக தெரிவிக்கிறார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் சாந்த குமாரி (64). இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பெரும்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில், மேடவாக்கம் கொரோனா மையத்திற்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர்.

கொரோனா மையம் திறக்கப்படவில்லை என மீண்டும் பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையை அணுகிய சாந்த குமாரியை அங்குள்ளவர் அலட்சியப் படுத்தியதாக தெரிவித்தார். மக்கள் நடமாடும் மருத்துவமனையின் நுழைவாயிலில் எங்கு செல்வது என அறியாது காத்துகிடப்பதாக தெரிவிக்கிறார் சாந்தகுமாரி. அவரது சிகிச்சைக்கு உடனடியாக சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com