கோயம்பேடு சந்தையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்ற 29 பேருக்கு கொரோனா

கோயம்பேடு சந்தையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்ற 29 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்ற 29 பேருக்கு கொரோனா
Published on

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை நாள்தோறும் சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட தகவலின்படி, நேற்று மட்டும் தமிழகத்தில் 203 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உள்ளது.

சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சென்னையில் மட்டும் 1082 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் வந்த 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 65-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து லாரிகளில் செல்லும் தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலில் மையப்புள்ளியாக கோயம்பேடு சந்தை உள்ளதா என்றும் ஐயம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com