பல மாதங்களுக்குப் பிறகு சிலர், இரு மாநில எல்லையில் சந்தித்து குடும்ப உறவுகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகளால் கேரளாவில் உள்ள தங்களது உறவினர்களை காண முடியாமல் பல மாதங்களாக தவித்து வந்தவர்கள், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மூணாறு செல்லும் சாலையில் சின்னாறு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில், குடும்ப உறவுகளை சந்தித்து பாசங்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
இ-பதிவு நடைமுறையில் இருப்பதாலும், கட்டுப்பாடுகளில் கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டதாலும், மாநிலம் தாண்டி செல்ல முடியாத சூழலில்,வேறு வழியின்றி இரு மாநில எல்லைப் பகுதியில் ஒருவரையொருவர் சந்திக்கும் நிகழ்வு தினந்தோறும் அரங்கேறி வருகிறது.
இரு மாநிலத்தை சேர்ந்தவர்கள், எல்லைப்பகுதியில் சந்தித்து குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.