அரியலூர் அருகே கொரோனா பாதிக்கப்பட்டவர் மது வாங்க வந்ததால் அங்கிருந்த மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் 53 கடைகளில் 18 டாஸ்மாக் கடைகள் தடைசெய்யப்பட்ட இடங்களில் வருவதால் 35 கடைகள் திறக்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அருகே கோட்டியால் பாண்டிபஜார் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை கொரோனா முடியும் வரை திறக்கக்கூடாது என பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து வேலை பார்த்து திரும்பிய தொழிலாளர்களர்களால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மதுபான கடையை திறக்க கூடாது எனக்கூறி சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து,குடையுடன் மதுக்கடை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கொரோனா தொற்றிக் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று மதுபானம் வாங்க வந்துள்ளார். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் அந்த மதுக்கடையை மூட உத்தரவிட்டார்.