கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி எப்போது? - பட்ஜெட்டில் தகவல்

கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி எப்போது? - பட்ஜெட்டில் தகவல்
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி எப்போது? - பட்ஜெட்டில் தகவல்
Published on

கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில், ''கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வதை அரசு முன்னுரிமையாக கொண்டுள்ளது. முந்தைய அரசு தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததால், 12,110.74 கோடி தற்போதைய அரசு மீது நிதிச்சுமையாக அமைந்துவிட்டது.

இதற்காக தற்போது, 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும், இதே நிலைமை ஏற்படும். அதனால் உரிய ஆய்வுக்கு பின்பு தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது தான், தவறுசெய்பவர்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பலனடைவார்கள். கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. அதுகுறித்த விரிவான தகவல் > கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் விவரங்கள் சேகரிப்பு 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com