கோவை - ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் Cool Lip.. குழந்தைக்கு உடல்நல கோளாறு

கோவை மாவட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் கூல்-லிப் எனும் புகையிலை பொருள் இருந்ததுn தரியாமல் அதனை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
cool lip in food
cool lip in food PT Web
Published on

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் ஸ்விக்கி மூலம் கீதா கேண்டீனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து ஆர்டர் செய்து பெறப்பட்ட உணவை தனது மகளுடன் இணைந்து ஜாஸ்மின் சாப்பிட்டுள்ளார். அப்போது உணவில் சிறிய பொட்டலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உணவில் கிடந்தது கூல்-லிப் எனும் புகையிலை பொருள் என்பதை அறிந்து கொண்டார்.

food
foodpt desk

இந்நிலையில், புகையிலை பொருள் கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையில் உடனே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து ஊழியர்கள் மற்றும் கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கடை உரிமையாளருக்கு அறிவுறுத்திச் சென்றார். இது தொடர்பாக உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com