3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரியில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவிந்த ரெட்டி என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாலகிருஷ்ண ரெட்டியும் கலந்து கொண்டார். போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. முதல் குற்றவாளி கோவிந்த ரெட்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 12 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தீர்ப்பால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாலகிருஷ்ண ரெட்டி, தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணையின் போது, நீதிபதிக்கும் பாலகிருஷ்ண ரெட்டி தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே காரசாரமான வாதம் நடைபெற்றது. வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு மதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாதத்தின் விவரம்:-
நீதிபதி : ஏன் தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவராக உள்ள நிலையில் வழக்கை எடுத்து செல்வதில் முன்மாதியாக இருக்கனும். ஏன் தீர்பை தடை செய்ய வேண்டும். . தண்டனையை தடுக்க சொன்னால் சரி. ஆனால் தீர்ப்பை ஏன் தடுக்க வேண்டும்.
பாலகிருஷ்ண வக்கீல் வாதம் : 72வது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டார். நேரடியாக குற்றஞ்சாட்டப்படவில்லை. பாகலூர் காவலர் அளித்த புகார், சாட்சியத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போராட்டத்தை வேடிக்கைதான் பார்த்துள்ளார். கோவிந்த ரெட்டி சாராயம் விற்பது குறித்து புகார் உள்ளதாக காவலர் ஏற்கனவே கூறியுள்ளர். அவர் பெயரை 28 சாட்சிகளில் ஒருவர் கூட பெயரை சொல்லவில்லை.
நீதிபதி : தகுதியிழப்பு ஆவீர்கள் என்பதால் நேரடியாக தீர்ப்பை தடை செய்ய சொல்கிறீர்களா? 108 பேர் குற்றம் சாட்டப்பட்ட்டு 16 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
போலீஸ் வக்கீல்: காவலர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. கூட்டமாகத்தான் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டார்கள். குறிப்பாக எந்த குற்றச்சாட்டும், இல்லை
நீதிபதி : அப்போ தீர்ப்பு தவறு என சொல்லவரீங்களா?
ரெட்டி தரப்பு வாதம் : இல்லை எப்.ஐ.ஆர். பதிவில் உள்ளதை சொல்கிறேன்
நீதிபதி : தண்டனை தடை தொடர்பான கோரிக்கையில் தடைவிதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து போலீசின் விளகத்தை அளிக்க வேண்டும்
ரெட்டி தரப்பு வாதம் : தீர்ப்பு வந்த உடனேயே ஆளுநரிடம் ராஜினாம கொடுத்துட்டோம். அதனால், எங்க கோரிக்கையை பரிசிலிங்க.
வாகனத்தை தாக்கியது, எரித்தது என எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லை. 20 அண்டு பழைய வழக்கில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
.
நீதிபதி: இதுபோன்ற வழக்குகள் பொதுபாகவே ஏதாவது ஒரு காரணத்தால் தாமதாகும். அவற்றை ஒரு நிலைப்பாடாக எடுக்க முடியாது.