தொடர் விடுமுறையை ஒட்டி அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாம்பன் பாலத்தில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக ராமேஸ்வரம் வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பாம்பன் பாலம் வழியாக சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது கடலின் அழகை ரசிப்பதற்காக பாம்பன் பாலத்தில் இருபுறமும் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா வாகனங்கள், மற்றும் அரசு பேருந்துகள் பாம்பன் சாலை பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் நூற்றுகணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்க கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.