அக்டோபர் மாதம் துவங்கும் பாம்பன் ரயில் போக்குவரத்து – புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம்

பாம்பன் ரயில் போக்குவரத்து அக்டோபர் மாதம் துவக்கி வைக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
New Pamban Bridge
New Pamban Bridgept desk
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் 2.1 கி.மீ.,ல் புதிய ரயில் பாலம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 1.6 கி.மீ. தூரத்திற்கான பாலம் பணி முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பாலத்தின் நுழைவில் தூக்குப் பாலம் இணைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது.

new Pamban bridge
new Pamban bridgept desk

தண்டவாளம் அமைக்கும் பணியும் நிறைவடைந்ததை அடுத்து ரயில் இஞ்சின் சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் அடுத்தடுத்த பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

New Pamban Bridge
விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கை... அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்!

கடலில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில், நவீன தூக்கு இயந்திர இஞ்சின் மூலம் நடுக்கடலில் பணி நடைபெற்றது. இதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com