பேரறிவாளன் பரோலில் வந்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களான அப்ரோஸ் அகமது, புல்லட் ராஜதுரை உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். பின்னர், பேரறிவாளனுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.