"டைட்டானிக் ஷிப்பில் யார் கேப்டனாக இருந்தால் என்ன"? - பீட்டர் அல்போன்ஸ்

"டைட்டானிக் ஷிப்பில் யார் கேப்டனாக இருந்தால் என்ன"? - பீட்டர் அல்போன்ஸ்
"டைட்டானிக் ஷிப்பில் யார் கேப்டனாக இருந்தால் என்ன"? - பீட்டர் அல்போன்ஸ்
Published on

டைட்டானிக் ஷிப்பில் யார் கேப்டனாக இருந்தால் என்ன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு என்ன பேரம் நடந்தது? என்ன உடன்படிக்கை? அரசாங்கம் தொடர்பாக ஏதும் இருக்கிறதா? என்பது தெரியவில்லை. இது ஒரு தற்காலிகமான தீர்வுதான். ஆங்கிலத்தில் கூறும் பழமொழி போல டைட்டானிக் ஷிப்பிற்கு யார் கேப்டனாக இருந்தால் என்ன? பல இடங்களில் அதிமுக அரசு தோற்று போய் இருக்கிறது. முக்கியமாக விவசாயிகள் பிர்சனையில் தோல்வியடைந்து இருக்கிறது.

"அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்தான் ஈபிஎஸ்-ஸை ஒத்துக்கொள்ளமாட்டேன் என்றார். வழிக்காட்டுதல் குழு அமைக்க வேண்டும் என்றார். இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 10 நாள்களாக முதல்வர் வீட்டுக்கும் துணை முதல்வர் வீட்டுக்கும் அமைச்சர்கள் சென்றுகொண்டு இருந்தார்கள். குழப்பங்களை எதிர்கட்சி செய்யவில்லை. அவர்களின் இடையே தான் குழப்பம். இப்போது தற்காலிகமாக சரி செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com