மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப் 4 தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
8-ம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வியால் தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இன்றைய டிஎன்பிஎஸ்சி கேள்வி தாளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் யார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.