நெல்லுக்கு குறைவான விலை கொடுப்பதாக புகார்... ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி எம்எல்ஏ

நெல்லுக்கு குறைவான விலை கொடுப்பதாக புகார்... ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி எம்எல்ஏ
நெல்லுக்கு குறைவான விலை கொடுப்பதாக புகார்... ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி எம்எல்ஏ
Published on

விவசாயிகளின் நெல்லுக்கு விலை குறைவாக போடப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லுக்கு நேற்று விலையை குறைத்து போட்டதாக விவசாயிகள், கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் இன்று செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். அதற்கு விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளுக்கு குறைவான விலை போடுவதாக புகார் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை செஞ்சி எம்எல்ஏ சந்தித்து பேசினார் அப்போது அவர்கள் சமீபத்தில் பெய்த மழையால் தற்போது வரும் நெல் மூட்டைகள் தரமற்றதாக இருப்பதாகவும் அதனால் அதற்கேற்றார் போல் விலை போடுவதாக வியாபாரிகள் கூறுவதாகவும் தெரிவித்தனர்.

எனவே தரத்துக்கு ஏற்றாற்போல் விவசாயிகளுக்கு நல்ல விலை வழங்க வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு அவர் அதிகாரிகளிடம் வற்புறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com