திருமலை திருப்பதி ஏழுமலையான் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
தனியார் நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகர் சிவகுமார் திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து தவறாகப் பேசியதாக வீடியோ வெளியானது. அதனை அடிப்படையாக வைத்து நடிகர் சிவகுமார் உள்ளிட்ட 12 பேர் மீது ஆந்திர மாநில காவல் நிலையத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திந் விஜிலன்ஸ் பிரிவு புகாரளித்தது. இதனையடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி "திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஜூன் 11 முதல் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்" என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.