இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தா.பாண்டியன் 1932ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி பிறந்தார். காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1989 மற்றும் 1991ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில், வடசென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவராக இருந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.