வேட்பாளார் அறிவிப்பு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ”இண்டியா கூட்டணிக்கு முன் மாதிரி தமிழ்நாடுதான். ஏனெனில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது ஒரு சக்திவாய்ந்த ஒரு அணி. 40 தொகுதியில் திமுக வெற்றி பெரும்.
நாடாளுமன்றத்தை எதிர்நோக்கும் விதமாக நாங்கள் திமுகவிடம் 3 தொகுதியை ஒதுக்கச்சொல்லி கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார்கள். அதன்படி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு கே. சுப்பராயன். நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு வை. செல்வராஜ் போட்டியிட இருக்கின்றனர்” என்றார்.