முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா பாதிப்பு என தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கொரோனா என வெளியான செய்தி உண்மையில்லை. அவர் முதலமைச்சரின் இல்லப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. கீரின்வேஸ் சாலையில்nகடந்த 30-ஆம் தேதி வரை பணியில் இருந்த பெண் காவலர் கடந்த 6-ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. அவர் முதலமைச்சரின் இல்லப் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடவில்லை. எனவே பெண் காவலருக்கு கொரோனா தொற்று என வெளியான செய்தியில் உண்மையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.