“கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்" இரவு ஊரடங்கு பணி போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை

“கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்" இரவு ஊரடங்கு பணி போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை
“கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்" இரவு ஊரடங்கு பணி போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை
Published on

“கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்" இரவு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலமாக காவல் ஆணையர் அறிவுரை வழங்கி உள்ளார்.

ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து இரவு முழு ஊரடங்கு தொடங்கி உள்ளது. சென்னையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர், 200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு சென்னை காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் "போலீஸ் வாக்கி டாக்கி" மூலம் அறிவுரை வழங்கி உள்ளார். "இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள், அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதனை கண்காணியுங்கள்.

மருத்துவ தேவை, மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்ல அனுமதியுங்கள். தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள்" என்று போலீஸ் வாக்கி டாக்கி  மூலமாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com