தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 12-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக `சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத வன்மம் பரப்பினால் உடனடி நடவடிக்கை: இணையவழி வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த முடியுமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக முடியும். அதற்கென்று ஒரு தலைபட்சமாக இருக்கக் கூடாது
அரசாங்கம் நினைச்சா... கட்டுப்படுத்தமுடியும்
சாதி மத வன்மத்தை, வார்த்தைகள் மூலம் மிகக் கடுமையாக, இனணயத்தில் வைப்பதை தடை செய்யும் வேளையில், பொதுக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசும்போதும், நேரில் அவைகளைக் காட்டி ஒதுக்கி வைத்துப் பேசும்போதும் தாக்கம் அதிகமாகி விடுகிறது. நடைமுறையில் தீண்டாமை பேச்சு, செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.
முடியுமா இல்லை, முடியனும். நான்-ல 90ஸ் கிட். எங்க பெற்றோர் ஓட ஜாதி போய்ரும். டிக்டாக் போன ஆண்ட வம்சம் அடக்குன வம்சம் ஒரு கூட்டம் சுத்துது
கொரோனாவை கூட கட்டுப்படுத்தி விடலாம் சார். ஆனால் சாதி மத வன்மம் கட்டுப்படுத்த முடியாது சார் இணையதளத்தில்.
சிறப்பான வரவேற்க வேண்டிய நடவடிக்கை. முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும்! இதேபோல் காலம் காலமாக அரசியலில் சாதி,மத பாகுபாடு காட்டும் கட்சிகளுக்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டினால் நன்றாக இருக்கும்.
சமூகத்தின் மக்களின் எண்ணங்களில் உள்ள சாதி, மத வெறுப்புணர்வை அகற்றினால் சமூக வலைத்தளங்களின் வண்ணங்களில் உலாவும் இந்த கொடிய விஷம் தானாக அழிந்து விடும். முடியாதது ஒன்றும் இல்லை இவ்வுலகில்... முயற்சிக்கு வாழ்த்துகள்!