திண்டுக்கல்: தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல்

திண்டுக்கல்: தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல்
திண்டுக்கல்: தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியல்
Published on

திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ளது முத்தனம்பட்டி. இங்கு தனியாருக்கு சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் தாளாளராக ஜோதி முருகன் என்பவர் இருந்து வருகிறார். இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை வெளியே சொல்லமுடியாமலும் பெற்றோரிடம் சொல்ல முடியாமலும் மாணவிகள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று 18.11.21 கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை சமாதானம் செய்யவந்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தாக்கினர். மேலும் கல்லூரி தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 300க்கு மேற்பட்ட மாணவர்கள் முத்தனம்பட்டி சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் நீடித்தது. ஜோதிமுருகன் அமமுக பிரமுகர் மற்றும் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com