கன்னியாகுமரியில் 7.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கலைக் கல்லூரி திறக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டடம் 7.50 கோடி ரூபாய் செலவில் நாகர்கோவிலை அடுத்த கோணத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக வடசேரி அரசு உயர் நிலைப் பள்ளியில் இந்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்தச் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதிய கட்டடத்தை இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென கட்டடம் திறக்கப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அங்கு விரைந்து வந்த அரசு அதிகாரிகள் மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.