“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி

“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி
“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி
Published on

கோயம்புத்தூர் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலி என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பவம் குறித்து கலைமகள் கல்லூரி முதல்வர் பேசியிருப்பது பயிற்சியாளருக்கு சப்போர்ட் செய்வது போல் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி கூறும் போது, பயிற்சியாளரின் வழிகாட்டுதலை மாணவி பயமின்றி பின்பற்றி இருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த நிகழ்வுக்கும் மாணவி பயிற்சியாளர் சொன்னதை கேட்காததே காரணம் என அவர் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார். 

கேள்வி : பயிற்சியாளர் மாணவியை பிடித்து தள்ளுவது போல் வீடியோவில் உள்ளதே ?

விஜயலெட்சுமி : இல்லை , இல்லை, மாணவி எப்படி அமர்ந்து, குதிக்க வேண்டும் என அவர் கூறினார். அவர் சொல்வதை மாணவி பின்பற்றி இருக்க வேண்டும், ஆனால் பயம் காரணமாக அவரால் அதை செய்ய முடியவில்லை

கேள்வி : மாணவி லோகேஸ்வரி வழிமுறைகளை முறையாக பின்பற்றாததால்தான் இந்த மொத்த நிகழ்வும் நடந்ததா? 

விஜயலெட்சுமி : ஆமாம் , ஆமாம். அதுதான் காரணம்.

கேள்வி : இது ஒருபுறம் இருக்க, ஆறுமுகம் எங்களிடம் பயிற்சி பெற்றவரோ அல்லது ஆணையத்தை சேர்ந்தவரோ இல்லைனு சொல்லியிருக்காங்க. நீங்க எப்படி அவரை அதிகாரப் பூர்வ பயிற்சியாளர் என ஏற்றுக் கொண்டீர்கள் ? 

விஜயலெட்சுமி : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு பிரிவின் கடிதத்தில் ஆறுமுகம் அதிகாரப் பூர்வ பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் அவர் சரியான நபர் என்று நினைத்தோம். 

கேள்வி : ஆனால் உங்களுக்கு அவர் சரியான நபர்தானா என தெரியாது அப்படித்தானே ? 

விஜயலெட்சுமி : எங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவான யு.ஜி.சியிடம் இருந்தும் கடிதம் கிடைத்தது


ஆனால் சம்பவ இடத்தில் இருந்த மாணவர்கள் பேசும் போது மற்றொரு மாணவிக்கு அடிப்பட்ட போது கூட பயிற்சியாளர் லோகேஸ்வரியை குதிக்க சொன்னார் என கூறியிருந்தனர். மேலும் லோகேஸ்வரி பயத்தால் குதிக்க மறுத்த நிலையிலும் கூட , பயிற்சியாளர் குதிக்க சொன்னார் என்றதோடு, எந்த வித பாதுகாப்பு உபகரணங்களோ, கயிறோ இல்லாமல் லோகேஸ்வரியும் மற்றொரு மாணவியும் குதித்தனர் எனக் கூறினர். ஆனால் பயிற்சியாளர் மீது எந்த தவறும் இல்லை என்று கல்லூரி முதல்வர் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியே. 

மேலும் படிக்க : யார் இந்த ஆறுமுகம் ? பல கல்லூரிகளில் பயிற்சி நடத்தியது அம்பலம்   https://goo.gl/sTUkWJ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com