கோவை வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை சீர்குலைக்க முயற்சி - திமுக மீது சசிகலா குற்றச்சாட்டு

கோவை வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை சீர்குலைக்க முயற்சி - திமுக மீது சசிகலா குற்றச்சாட்டு
கோவை வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை சீர்குலைக்க முயற்சி - திமுக மீது சசிகலா குற்றச்சாட்டு
Published on

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தலை நடத்த விடாமல் திமுகவினர் சீர்குலைக்க முயற்சி செய்வதாக சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் வெள்ளளூர் பேரூராட்சியில் ஏற்கனவே கடந்த நான்காம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுகவினர் இடையூறு செய்து நடத்தவிடாமல், தற்போது மீண்டும் இன்று நடைபெறுகின்ற சூழலில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு, கழகத்தினரை அச்சுறுத்தி தேர்தைலை சீர்குலைக்கும் வகையில், செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

வெள்ளளூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் மறைமுகத் தேர்தலில் கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், திமுகவினர் இதுபோன்ற தில்லுமுல்லுகளை அரங்கேற்றி முறைகேடாக பேரூராட்சியை தாங்கள் அபகரித்து விடலாம் என்று எண்ணி, மறைமுகத் தேர்தலை நடத்த விடாமல் தொடர்ந்து இடையூறு செய்வதை யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதேபோன்று, மதுரை, கரூர், தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும், மறைமுக தேர்தலை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்வது கண்டனத்திற்குரியது.

தமிழக காவல்துறையினரும், பாரபட்சம் பார்க்காமல், அனைவருக்கும் பாதுகாப்பு அளித்து நியாயமான முறையில் மறைமுகத் தேர்தலை நடத்திட வழிவகை செய்திட வேண்டும். தமிழக மக்கள், திமுகவினரின் அடக்குமுறையையும், அராஜகப் போக்கையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தலைமையிலான அரசு வேலியே பயிரை மேயும் கதையாக செயல்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இவற்றுக்கெல்லாம் திமுகவினர் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com