கோவை: குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்

கோவையில் குடியிருப்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
residential
residential pt desk
Published on

செய்தியாளர்: பிரவீண்

கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்குச் சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் விமானப்படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள். இந்நிலையில் இங்கு குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகிய இருவரும் அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர்.

Police station
Police stationpt desk

அப்போது சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்குச் சென்ற குழந்தைகள் இருவரும், சறுக்கு விளையாட முயன்றுள்ளனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார தாக்குதலுக்கு உண்டான இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

residential
சேலம்: கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீடு – தூங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com