கோயம்பேடு: தெருவோரம் வசித்தோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்த விருகம்பாக்கம் எம்எல்ஏ

கோயம்பேடு: தெருவோரம் வசித்தோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்த விருகம்பாக்கம் எம்எல்ஏ
கோயம்பேடு: தெருவோரம் வசித்தோருக்கு சிறப்பு ஏற்பாடு செய்த விருகம்பாக்கம் எம்எல்ஏ
Published on

கோயம்பேட்டில் நடைமேடையில் வசிப்போர் மற்றும் ஆதரவற்றோர் மாநகராட்சி பள்ளிகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக அனைத்து கடைகள், சந்தைகள் மூடப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை தொடர்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையும் மூடப்பட்டதன் காரணமாக அங்கு மூட்டை தூக்குபவர்கள், காய்கறி வண்டிகளை இழுபவர்கள் வேலை இன்றி தவித்து வந்தனர்.

அதில், பலர் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் கோயம்பேடு பகுதியில் சாலை ஓரங்களிலும், பாலங்களுக்கு அருகேயும் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விருங்கம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கோயம்பேடு பகுதியில் வீடின்றி தங்கியுள்ள 150-க்கும் மேற்பட்டவர்களை மாநகராட்சி பள்ளிக்குள் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், இன்று மாலை பேருந்துகள் மூலம், வீடற்றோர் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. பொது முடக்கம் வரை மாநகராட்சி பள்ளியில் வீடற்றோர் தங்க வைக்கப் படுவார்கள் என்று தெரிவித்த எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, உணவு உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் அவர்களுக்கு செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com