கோவை: ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது
ஸ்டேன்ஸ்  மேல்நிலைப் பள்ளிக்கு  வெடிகுண்டு மிரட்டல்
ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்pt desk
Published on

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை அவிநாசி சாலையில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு இன்று காலை இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகம், மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த கோவை காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர்.

Bomb threat
Bomb threatpt desk

மாணவர்கள் அனைவரும் வகுப்புறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து துணை ஆணையர் கணேஷ் தலைமையிலான போலீசார் தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வெடி பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படாததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

ஸ்டேன்ஸ்  மேல்நிலைப் பள்ளிக்கு  வெடிகுண்டு மிரட்டல்
தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்? - ஆர்டிஐ-ல் கிடைத்த தகவல்

நேற்று முன்தினம் கோவை மாநகரில் 3 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸ் சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் அதே போன்றதொரு மிரட்டல், மீண்டும் நடந்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த பெற்றோர், பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com