நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பிய அதிமுக எம்எல்ஏ

நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பிய அதிமுக எம்எல்ஏ
நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊர் திரும்பிய அதிமுக எம்எல்ஏ
Published on

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் ஊர் திரும்பினார்.

புதிதாக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. இதில், பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து சொந்த ஊர் திரும்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி தலைமையின் முடிவுகள் பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அருண்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் பதவியையும் அருண்குமார் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 122ஆனது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com