கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு - மேலும் நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த NIA

கோவை கார் சிலண்டர் வெடிப்பு வழக்கு - மேலும் நான்கு பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Accused
Accusedpt desk
Published on

கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இவ்வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு கைப்பற்றியுள்ளது.

கார் சிலிண்டர் வெடிப்பு
கார் சிலிண்டர் வெடிப்புfile

இந்நிலையில் விசாரணையின் போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு சிலர் ஆட்கள் சேர்த்தது தெரியவந்தது. இதையடுத்து மேலும் ஒரு வழக்கை என்.ஐ.ஏ பதிவு செய்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜமீல் பாஷா, முகமது உசைன், இர்ஷாத் மற்றும் சையது அப்துல் ரஹ்மான் ஆகிய நான்கு பேர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Accused
போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் - மருத்துவமனையை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

இவர்கள் நான்கு பேரிடம் என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட கோவையில் அரபி வகுப்பு நடத்துவது போல் மாணவர்களை மூளைச்சலவை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் மூளையாக செயல்பட்டது ஜமீல் பாஷா என்பதும், இவர்தான் அரபி வகுப்பு நடத்துவது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளையை ஆரம்பித்து ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

NIA
NIApt desk

அதேபோல், கோயம்புத்தூரில் முகமது உசேன் மற்றும் இர்ஷாத் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரசங்கம் நடத்தி மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Accused
சென்னை: அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.45 கோடி மோசடி – நிதி நிறுவன இயக்குனர்கள் இருவர் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com