திருடனாக இருந்து சிற்பியாக மாறிய சிறைக்கைதி.. சிறையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்! யார் இந்த சிற்பி?

திருடனாக இருந்தவர் இன்று பிரபல சிற்பியாக மாறிய கதை
சிற்பி
சிற்பிபுதியதலைமுறை
Published on

திருடனாய் இருந்த வால்மீகி மனம் திருந்தி ராமாயண காவியத்தை படைத்ததாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. அப்படியொரு நிகழ்வு கோவையிலும் நடந்துள்ளது. அதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சரியான வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்தும் நபர்களும் இருந்தால் சிகரத்தையும் அடையலாம் என்பார்கள்... அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறை கைதியாக இருந்தவர் இன்று பிரபல சிற்பியாக மாறி இருக்கிறார்... தன்னம்பிக்கை ஊட்டும் அவரது பின்னணி குறித்து பார்க்கலாம்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய நுழைவாயில் அருகில் உள்ள, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிலைகளை வடிவமைத்தவர் ராஜ்குமார். கைதேர்ந்த சிற்பிகளுக்கே சவால்விடும் அளவிற்கு நுட்பமாக சிலை வடித்திருக்கும் அவர், 15 ஆண்டுகளுக்கு முன்புவரை சிற்பக் கலையைப் பற்றியே அறியாதவர்.

சிற்பி
மீண்டும் புனேவில் அரங்கேறிய கார் விபத்து! அதிவேக கார் மோதி 10 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பெண்!

கோவை மாவட்டம் காரமடை திம்மம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 2009-ஆம் ஆண்டு திருட்டு வாகனத்தை வாங்கி விற்றதாக, காட்டூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர்.

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜ்குமார், உள்ளே கிடந்த கரித்துண்டுகளை வைத்து சிந்தனை ஓவியங்களை வரைந்துள்ளார்.

இதைக் கண்ட சிறைக் காவலர் ஒருவர் அவரை ஊக்கப்படுத்தி பிணையில் சென்றவுடன் ஓவியம் சார்ந்த பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

NGMPC22 - 147

நான்கு மாத சிறைவாசத்திற்கு பிறகு பிணையில் வந்த ராஜ்குமார் தினமும் காட்டூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார். அப்போது, காவல் ஆய்வாளராக இருந்த சீனிவாசலு, ராஜ்குமாரின் திறமையை அறிந்து கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஓவியம் சார்ந்த பணிகளை செய்ய அறிவுறுத்தினார்.

சிற்பி
ஜம்மு காஷ்மீர் பற்றி சீனா- பாகிஸ்தான் கூட்டறிக்கையில் சர்ச்சை கருத்து - இந்தியா கடும் கண்டனம்

ஓவியம் வரைவதில் தொடங்கிய அவர், உடன் இருப்பவர்களின் ஊக்கத்தினால் சிற்பக் கலையிலும் சிறந்து விளங்கும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொண்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த 15 ஆண்டுகளில் முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு கான்கிரீட் சிற்பங்களையும், நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட சிலைகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார். மனதில் கொண்ட கொள்கையை விடாது பிடித்துக் கொண்ட ராஜ்குமார், தனது குழந்தைகளும் அதே துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று கட்டடக்கலை படிப்பில் சேர்த்துள்ளார்.

இது குறித்து ராஜ்குமார், சிற்பி செய்தியாளார்களிடையே பேசும்பொழுது,

"செம்மொழி மாநாட்டின்போது சுவற்றில் வரையத் தொடங்கினேன். நன்கொடை வழங்கி உடன் இருந்தவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.உடன் இருந்தவர்கள் கொடுத்த ஆதரவு எனது ஆர்வத்தை அதிகமாக்கியது" என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com