கோவையில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹால்மார்க் முத்திரையுடன் தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில் ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி பகுதிகளில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த தங்கத்தை விற்பனை செய்வதாக இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் இரண்டு குழுவாக பிரிந்து ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, போலியான முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கங்களை பறிமுதல் செய்தனர்.