கோவை|"என் மகன் சூப்பர் பவர் இருப்பதாகக்கூறி மாடியில் இருந்து குதித்தாரா? அது பொய்" - கதறி அழுத தாய்!

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியின் 4 ஆவது மாடியில் இருந்த மாணவன் குதித்த சம்பவத்தில், தனது மகன் சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி குதித்தாக பரவும் தகவலில் உண்மை இல்லை என மாணவனின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கதறி அழுத தாய்
கதறி அழுத தாய்pt desk
Published on

செய்தியாளர்: பிரவீண்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த மாணவர் பிரபு, செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரியில் பிடெக் பயின்று வந்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதியின் நான்காவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில், அவருக்கு உடல் முழுவதும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் தற்போது கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணம் திரட்டும் முயற்சி
பணம் திரட்டும் முயற்சிpt desk

இதனிடையே மாணவர் தனக்கு சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி குதித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தன் மகன் சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி குதித்ததாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை; என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை என்று மாணவரின் தாய் கூறியுள்ளார்.

மேலும், “என் மகனின் சிகிச்சைக்கு 20 லட்சம் ரூபாய் வரை பணம் தேவைப்படுகிறது. பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இப்போது எனது மகன் சூப்பர் பவர் இருப்பதாகக் கூறி குதித்ததாக பரவும் தகவல்களால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

கதறி அழுத தாய்
புதுச்சேரி விடுதலை நாள் விழா - அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை!

அத்துடன், முதல்வர் தனது மகனின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிருக்காக தனது மகன் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் இது போன்ற தகவல் பரவுவது வேதனை அளிப்பதாகவும், மகன் குணமடைந்து வரும்போது இது போன்ற தகவல் பரவியது தெரிந்தால் மிகுந்த வேதனைக்கு ஆளாவார் எனவும் தாய் நாகலட்சுமி வேதனையுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com