இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ’பாராயணம்’! எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகள்.. சேகர்பாபு சொல்வது என்ன?

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் பாராயணம் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சேகர்பாபு, ரவிக்குமார், சு.வெங்கடேசன்
சேகர்பாபு, ரவிக்குமார், சு.வெங்கடேசன்எக்ஸ் தளம்
Published on

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் பாராயணம் செய்யவக்க முயல்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராயணம் பாடும் நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திராவிடர் கழகம், “அரசின் கல்விக் கூடங்கள் மதச்சார்பற்ற தன்மையில் நடக்க வேண்டும். பக்தியை வளர்ப்பதும் கட்டாயப்படுத்தி மாணவர்களைப் பாராயணம் செய்விப்பதும் அறநிலையத் துறையின் வேலையில்லை என்பதை அழுத்தத் திருத்தமாக நினைவூட்ட விரும்புகிறோம்” எனத் தெரிவித்திருந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணி கட்சியாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ ‘புதுமைப் பெண்’ திட்டத்துக்கு எதிராகப் ‘பழமைப் பெண்’ திட்டமா? தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு. கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மீண்டும் அரியணையில் டொனால்டு ட்ரம்ப்.. இந்தியாவுக்குச் சாதகமா? மாறப்போகும் 5 விஷயங்கள்!

சேகர்பாபு, ரவிக்குமார், சு.வெங்கடேசன்
சென்னை: மாணவ மாணவிகளின் விருப்பத்தின் பேரிலேயே கந்த சஷ்டி கவசம் பாட அனுமதி – அமைச்சர் சேகர்பாபு

இதே விவகாரத்தில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்து அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில், மாணவிகளை பாராயணம் பாடச்சொல்லி கோயிலுக்கு அனுப்பும் அறநிலையத்துறை நிர்வாகமே, அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச்சொல்லி கோயிலுக்கு அனுப்புவீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேரும், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேரும் என மொத்தம் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.

இதையும் படிக்க: ரஷ்யாவும் வடகொரியாவும் நண்பர்கள்.. இது என்ன புது யுக்தி? புவி அரசியல் சொல்லும் சேதி என்ன?

சேகர்பாபு, ரவிக்குமார், சு.வெங்கடேசன்
“பழனி கோயில் கோபுர சிலை சேதமடைந்ததற்கு ஊழல் காரணமில்லை” - H.ராஜாவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்

இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்ததுடன், கந்தசஷ்டி பாராயணம் பாடிய அனைத்து மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டியிருந்தார். அப்போது பேசிய அவர், “பழனி முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக திருக்கோயில்களில் பள்ளி, கல்லூரி, இசைக்கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று கந்த சஷ்டி பாராயணம் பாடப்படும் என இருந்தது. அதன்படி தற்போது 738 மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பெற்ற மாணவிகள் கந்த சஷ்டி பாராயணத்தை ஒப்புவித்தனர்.

இதுபோல 12 திருக்கோயில்களில் மாணவ மாணவிகள் பங்கேற்று பாட உள்ளனர். வடபழனி திருக்கோயிலிலும் வரும் 6ஆம் தேதி (இன்று) கந்த சஷ்டி பாராயணம் நடைபெறும்” என்றவரிடம், ”மாணவ மாணவிகளை கந்த சஷ்டி பாட வைப்பதற்கு கூட்டணி கட்சியில் இருந்து எதிர்ப்பு வருகிறதே” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்
பி.கே.சேகர்பாபு, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்

அதற்குப் பதிலளித்த அவர், ”ஆன்மிக உலகில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகளை பக்தர்கள் தேவை அறிந்து செய்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்” எனப் பதிலளித்திருந்தார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்|டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றது இப்படிதானா? A to Z விரிவான தகவல்கள்!

சேகர்பாபு, ரவிக்குமார், சு.வெங்கடேசன்
“தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டுக்கு திமுக ஆட்சிதான்” - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com