விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கை... அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடக்கி வைக்கிறார் முதலமைச்சர்!

விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்முகநூல்
Published on

ஈரோடு, திருப்பூர், கேவை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கேரிக்கையாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 1,916 கோடி ரூபாய் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2 ஆயிரம் கனஅடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்
“பட்டியலின முதலமைச்சர் வேட்பாளர்” - திருமாவளவன் சொன்ன கூற்றும் பாமக சொல்லும் அரசியல் பாதையும்!

இத்திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 31 ஏரிகளும், 1,045 குளம், குட்டைகளும் நீராதாரத்தை பெறும். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களை சேர்ந்த 50 லட்சம் மக்கள் பயனடைவர். விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com