8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்

8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்
8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்: பேரவையில் ஸ்டாலினின் முக்கிய அறிவிப்புகள்
Published on

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட பல வழக்குகள் வாபஸ் பெறப்படுவது குறித்து அறிவித்தார். அதில்,

  • கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும்.
  • மீத்தேன், நியூட்ரினோ.ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். அதேபோல் எட்டுவழிச்சாலையை எதிர்த்து போராடியவர்கள்மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், கூடங்குளம் திட்டங்களுக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
  • வடமாவட்ட தொழில் வளர்ச்சியை பெருக்கிட செய்யாறு, திண்டிவனத்தில் 2 பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும்.
  • தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்; புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
  • தமிழகத்திலுள்ள திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சைபெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com