“அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?”-பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது” - பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
மு.க.ஸ்டாலின் - மோடி - ஜி.எஸ்.டி
மு.க.ஸ்டாலின் - மோடி - ஜி.எஸ்.டிபுதிய தலைமுறை
Published on

நாட்டில் ஜி.எஸ்.டி அமல்படுத்தியது தொடர்பான கடுமையான விமர்சனத்தை பிரதமர் மோடி மீது வைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் தன் எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், “ ‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், Bill-இல் உள்ள GST-யைப் பார்த்து Gabbar Singh Tax எனப் புலம்புகின்றனர்!

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?
மு.க.ஸ்டாலின் - மோடி - ஜி.எஸ்.டி
"எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!"-மத்திய அரசை நோக்கி முதல்வர் கேள்வி

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.

33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்

GST: வரி அல்ல… வழிப்பறி!” என்றுள்ளார்.

மு.க.ஸ்டாலின் - மோடி - ஜி.எஸ்.டி
“நெருங்கிய நண்பர் என்பதால் அதானியிடம் அனைத்து துறைகளையும் ஒப்படைத்திருக்கிறார் மோடி” - ராகுல் காந்தி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com