"கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது" - முதல்வர் ஸ்டாலின்

"கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது" - முதல்வர் ஸ்டாலின்
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது" - முதல்வர் ஸ்டாலின்
Published on

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது என்றும் உயர்க்கல்வி, ஆராய்ச்சியிலும் சிறந்த தமிழ்நாடு என்பதாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் எனும் பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்காக உபகரணங்களை உருவாக்கியிருந்தனர். இதற்காக, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற முதலமைச்சர் அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக உபகரணங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக 5 ஆயிரம் ரூபாயுடன் பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.

பின்னர் பேசிய முதல்வர், தமிழக கல்லூரிகளில் ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த படிப்பு மற்றும் பட்டங்களை தமிழக கல்லூரிகளில் அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது என்றும், உயர்க்கல்வி, ஆராய்ச்சியிலும் சிறந்த தமிழ்நாடு என்பதாக வேண்டும் என முதலமைச்சர் விருப்பம் தெரிவித்தார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com