ரெட் அலர்ட்! ’தயாரா சென்னை மக்களே?’ யாருக்கெல்லாம் விடுமுறை.. முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஒரு சில அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்புதிய தலைமுறை
Published on

சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு ஒரு சில அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு வரும் அக்டோபர் 16 ஆம் தேதி ரெட் அலார்ட் விடுப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்காக, இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வடகிழக்கு பருவமழை மற்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்யவிருக்கும் கனமழை காரணமாக, ஆலோசனை கூட்டமானது நடைப்பெற்றது.

ரெட் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

இதில் விடுமுறை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்தான முக்கிய அறிவிப்புகளை பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

  • நாளையிலிருந்து (15.10.2024) வருகின்ற (18.10.2024) வெள்ளிக்கிழமை வரை ஐடி போன்ற தனியார் தகவல் தொழிநுட்பங்கள் வீட்டிலிருந்தே பணிப்புரிய வேண்டும்.

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளில் இன்றிலிருந்தே மீட்பு படகுகள் நிறுத்தப்படவேண்டும்.

  • தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

  • நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்; முன்கூட்டியே மக்களை தங்க வைக்க வேண்டும்..

  • ரொட்டு, குடிநீர், பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும்.

  • தடையற்ற குடிநீர் வழங்க போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்

  • நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களை வைத்திருப்போர், கனமழைக்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

  • கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் தங்களுக்கு முன்னதாகவே செய்யது கொள்ள வேண்டும்.

  • அறுந்து கிடக்கும் மின்கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

  • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்..

  • மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை நம்ப வேண்டாம்.

என இது போன்ற முக்கிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

ரெட் அலர்ட்
குஜராத்: கணக்கு டீச்சருக்கே கணக்கு சரியா வரலை? விடைத்தாள் திருத்தும்போது 30 மார்க்கை தவறவிட்ட அவலம்!

மேலும், மாநாகராட்சி ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் இருக்க சென்னை மாநாகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 21,000 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் எனவும், 24 மணி நேரமும் மாநகராட்சி ஊழியர்கள் பணியில் இருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்டி வனத்துறை

மழையின் போது வீடு மற்றும் வீட்டின் அருகே பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்தால், அதனை வீட்டிற்கு வந்து பிடிப்பதற்கு குழுக்கள் தயார்நிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்டி வனத்துறை அறிவிப்பு.

அதற்கான எண்ணையும் வெளியிட்டுள்ளது.

04422200335 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com